பாஜகவைத் திட்டினாலும் பாஜக இல. கணேசனுக்குப் பாராட்டு.. அவர்தான் "கலைஞர்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பாஜக அரசை பல்வேறு விஷயங்களுக்காக கடுமையாக விமர்சித்து வரும் திமுக தலைவர் கருணாநிதி, அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் இல.கணேசன், ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இரண்டையும் ஒரே அறிக்கையில் கூறி, தனது ரெகுலர் அரசியல் நாகரீக, டச்சை கொடுத்துள்ளார் கருணாநிதி.

Slaming BJP government, greets Ila.Ganeshan, this is Karunandhi for you

திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி - பதில்கள் வடிவிலான அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கடுமையாக கண்டித்துள்ளார். அதேபோல அரசி விலை ஏற்றப்பட்டதற்கும் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தமிழக பாஜகவை சேர்ந்த இல.கணேசன் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார் கருணாநிதி.

இதுபற்றிய அவரது கேள்வி பதிலை பாருங்கள்,.

Slaming BJP government, greets Ila.Ganeshan, this is Karunandhi for you

கேள்வி :- தமிழகத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பற்றி?

கருணாநிதி :- பா.ஜ.கட்சிக்காக உண்மையில் நீண்ட காலமாக உழைத்து வந்த அருமை நண்பர் இல. கணேசன் மத்தியப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். என்னிடம் தனிப்பட்ட முறையில் என்றும் மாறாத அன்பு கொண்டவர் அவர். அவருக்குக் கிடைத்துள்ள இந்தப் பொறுப்பு மகிழ்ந்து பாராட்டப்படக் கூடியது. அவரை மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

இதன்மூலம், அரசியல் மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு, அரசியல் நாகரீகத்தோடு பாஜக மூத்த தலைவரை வாழ்த்தி, வழிகாட்டியுள்ளார் கருணாநிதி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Eventhough slaming BJP government, DMK chief Karunandhi greets Ila.Ganeshan for electing as Rajyasabha MP.
Please Wait while comments are loading...