டயர்கள், பழைய பொருட்களை எரித்து போகி.. சென்னையை சூழ்ந்தது கரும்புகை

பழைய பொருட்கள், டயர்கள், பிளாஸ்டிக் ஆகிய பொருட்களை எரித்து சென்னையில் போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனால் கரும்புகை சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் சூழ்ந்தது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் பழைய பொருட்கள், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் எரித்து போகி பண்டிகையை கொண்டாடினார்கள்.

இன்று அதிகாலை முதல் பழைய பொருட்களை எரித்து பொதுமக்கள் போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டினார்கள். அப்போது, டயர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் எரிக்கப்பட்டன. ஏற்கனவே, டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கக்கூடாது என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சில நிபந்தனைகளை விதித்திருந்தது.

Smog Chennai, by Bhogi

எனினும், பொதுமக்கள் இதனை காதில் வாங்கிக் கொள்ளாமல், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை கொளுத்தினார்கள். இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கரும்புகை சூழ்ந்து கொண்டது. இதையடுத்து பெரும்பாலானோர் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே பனிமூட்டம் இருப்பதால் புகையும் அதோடு கலந்துவிட்டது. இதனால் வாகனங்கள் செல்வதைக் கூட பொதுமக்களால் பார்க்க முடியவில்லை. இதனால் அலுவலகம் செல்வோர், பாதசாரிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+