For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ஷாக்"கடிக்கும் ஆர்.கே.நகர்.. ஒரு வீட்டுக்குக் குறைந்தது ரூ. 1 லட்சம் போயிருக்காமே??

Google Oneindia Tamil News

Recommended Video

    எல்லார் கையிலும் ரூ.2000 நோட்டு... அடேங்கப்பா தொகுதியான ஆர் கே நகர்- வீடியோ

    சென்னை: ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் படு கேவலமான நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்த இடைத் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்று ஏன் இன்னும் தேர்தல் ஆணையம் பிடிவாதமாக இருக்கிறது என்றே தெரியவில்லை.

    வீட்டுக்கு குறைந்தது ரூ. 1 லட்சம் வரை பணம் போயுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிர வைப்பதாக உள்ளது இந்த செய்தி. கிட்டத்தட்ட அத்தனை முக்கியக் கட்சிகளும் பணம் கொடுத்துள்ளனவாம்.

    ஒரு வீடு கூட பாக்கி இல்லை என்றும் சொல்லப்படுகிறது. அத்தனை வீடுகளுக்கும் பணம் பாய்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

    ஜெயலலிதா வென்ற தொகுதி

    ஜெயலலிதா வென்ற தொகுதி

    ஜெயலலிதா வென்ற தொகுதி ஆர்.கே.நகர். அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் தொகுதி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியாகவுள்ள இத்தொகுதிக்கு இடைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பாடாய்ப்படுகிறது.

    பணம் பணம் பணம்

    பணம் பணம் பணம்

    ஆனால் நல்லவர்கள் வெட்கித் தலை குணியும் வகையிலான நடவடிக்கைகள் அங்கு நடந்து வருகின்றன. முதல் முறை தேர்தலை ஒத்திவைத்தபோது பணப் பட்டுவாடாதான் காரணமாக கூறப்பட்டது. ஆனால் தற்போது கடந்த முறையை விட படு கேவலமான காட்சிகள் அரங்கேறி வருவதாத சொல்கிறார்கள்.

    வீட்டுக்கு ரூ. 1 லட்சம்

    வீட்டுக்கு ரூ. 1 லட்சம்

    ஒவ்வொரு கட்சியும் அங்கு பணத்தை வாரி இறைத்து வருகிறதாம். இந்தக் கட்சிதான் என்று இல்லாமல் அத்தனை முக்கியக் கட்சிகளும் பணம் தருவதால் ஆர்.கே.நகர் வாக்காளர்கள் படு வேகமாக விலை போய் வருகிறார்களாம். வீட்டுக்கு ரூ. 1 லட்சம் வரை போயுள்ளது என்பதுதான் அதிர வைக்கும் செய்தி.

    அசிங்கப்படுத்தும் வாக்காளர்கள்

    அசிங்கப்படுத்தும் வாக்காளர்கள்

    கட்சிகள் தரும் பணத்தை எந்த வாக்காளரும் தட்டிக் கழிக்காமல் வாங்கிக் கொள்கிறார்கள் என்பதுதான் அதை விட அதிர்ச்சியானதாக உள்ளது. தலைக்கு இத்தனை ஆயிரம் என்று பகல் இரவு பாராமல் கட்சியினர் வந்து கையில் வைத்து விட்டுப் போகிறார்களாம். இதுவரை வீட்டுக்கு குறைந்தது ரூ. 1 முதல் 1.5 லட்சம் வரை பணம் பாய்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

    என்ன கொடுமைடா சாமி இது... !

    English summary
    In RK nagar sources say that so far nearly Rs 1 lakh cash has been issued to each and every house in RK Nagar by almost all the major political parties.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X