ரஜினி மகள் சௌந்தர்யா ஓட்டிய கார் மோதி விபத்து - ஆட்டோ டிரைவர் காயம்
நடிகர் ரஜினி காந்த் மகள் சௌந்தர்யாக ஓட்டிச் சென்ற கார் ஆட்டோ மீது மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: நடிகர் ரஜினி காந்த் மகள் சௌந்தர்யாக ஓட்டிச்சென்ற கார் ஆட்டோ மீது மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் சமாதானத்தை அடுத்து இந்த விபத்து குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இன்று அதிகாலையில் சௌந்தர்யா தனது காரில் ஆழ்வார்பேட்டை அருகே வந்து கொண்டிருந்த போது நிறுத்தி வைத்திருந்த ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் மணி காயமடைந்துள்ளார். அப்போது அந்த பகுதி மக்கள் உடனடியாக கூடினர்.

விபத்தை ஏற்படுத்தியது ரஜினி மகள் சௌந்தர்யா என்று தெரியவரவே பரபரப்பு அதிகரித்தது. உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு நடிகர் தனுஷ் வந்து சமாதான பேச்சு நடத்தி இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டியதாக கூறப்படுகிறது.
ஆட்டோ சேதத்திற்குண்டான பொருட்செலவையும், டிரைவரின் சிகிச்சைக்குண்டான பணத்தையும் கொடுக்கும்படி பொதுமக்கள் வலியுறுத்தினர்.இதற்கு சம்மதம் அளித்த பிறகே பிறகே, சவுந்தர்யா மீது எந்த வழக்கும் இல்லாமல் சமரச பேச்சுவார்த்தையிலேயே இந்த பிரச்சினை முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
நள்ளிரவு பார்ட்டியில் பங்கேற்கும் பிரபலங்களின் வாகனங்கள் அதிகாலையில் விபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது. ஆடி கார் ஐஸ்வர்யா, அருண் விஜய் தொடங்கி இப்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் வரை விபத்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications