அசோக்குமார் குடும்பத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்
தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார் குடும்பத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து இருக்கிறது.
சென்னை: தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார் குடும்பத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து இருக்கிறது. அவர் இழப்பு பெரும் வருத்தமளிப்பதாக கூறியிருக்கிறது.
இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 40 வயது நிரம்பிய இவர் அபிராமபுரத்தில் தற்கொலை செய்து கொண்டார். வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட இவர் தன் தற்கொலை குறித்து கடிதம் எழுதி வைத்துள்ளார்.

தற்போது இவரின் மரணத்திற்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து இருக்கிறது. தங்கள் இரங்கல் கடிதத்தில் "தற்கொலை செய்துகொண்ட அசோக்குமாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறது. மேலும் '' அசோக்குமாரின் முடிவு திரைப்படதுறைக்கு கேள்வியை விட்டுச்சென்று இருக்கிறது என்றும் கூறியுள்ளது.
அதேபோல் "திரைப்படதுறை தன்னை சுய ஆய்வு செய்து கொள்ள வேண்டும். இது ஒரு மிகப்பெரிய அபாய எச்சரிக்கை மணி'' என்றும் கூறியுள்ளது.
மேலும் ''நம்முடைய சினிமா துறை பல உயரங்களை அடைந்து இருக்கிறது. ஆனால் இன்னமும் நாம் எதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் என்ற கேள்வியை அசோக்குமார் மரணம் நமக்கு கேட்டு இருக்கிறது'' என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications