ஜோடிகளுக்கு சிறப்பு பூஜை.. பிரேக்கப்பிற்கு பரிகாரம்.. தமிழ்நாட்டில் ஒரு காதலர் தின கோவில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பிரேக்கப்பிற்கு பரிகாரம்.. தமிழ்நாட்டில் ஒரு காதலர் தின கோவில்!- வீடியோ

  வேலூர்: வேலூரில் காதலை மையமாக வைத்து காதலர் தின கோவில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதை பக்தர்கள் செல்லமாக வேலண்டைன் கோவில் என்று அழைத்து வருகிறார்கள்.

  இது வேலூரில் இருக்கும் சோளிங்கர் என்ற இடத்தில் இருக்கிறது. காதலர் தினத்திற்காக இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

  முக்கியமாக பிரிந்திருந்த காதல் சேரும் என்றும் நம்பப்படுகிறது. இந்த கோவில் நிர்வாகிகளுக்கு இதன் காரணமாக நிறைய பிரச்சனைகளும் கூட வந்துள்ளது.

  கோவில்

  கோவில்

  இந்த கோவிலில் கிருஷ்ணாவும், ராதாவும் பிரதான கடவுளாக இருக்கிறார்கள். இதை 2011ம் ஆண்டு ஆர். ஜெகன்நாத் என்பவர் கட்டியிருக்கிறார். அன்பையும் காதலையும் பிரதானமாக கொண்டு இந்த கோவிலை காட்டியுள்ளார்.

  எப்படி

  எப்படி

  இந்த கோவிலை முதலில் பலவந்தாங்களில் கட்ட முடிவெடுத்துள்ளார்கள். இந்த நிலையில் கடைசியாக சோளிங்கரில் கட்டியுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இதற்காக சிறப்பான கற்கள் காதலை வெளிப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

  பெயர் மாற்றம்

  பெயர் மாற்றம்

  முதலில் இந்த கோவிலுக்கு வேலண்டைன் கிருஷ்ணா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல இந்து அமைப்புகள் இதற்கு பிரச்சனை செய்துள்ளது. இதனால் தற்போது ''ஸ்ரீ பிருந்தாவன துளசி கிருஷ்னா கோவில்'' என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

  சிறப்பு

  சிறப்பு

  இந்த கோவிலுக்கு காதல் ஜோடிகள் வருகிறார்கள். காதலர் தினம் அன்று இங்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இங்கு நடக்கும் பூஜையால் காதல் கைகூடும், பிரிந்த காதல் சேரும், காதல் கல்யாணத்தில் முடியும் என்று கூறப்படுகிறது .

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A temple called Valentines temple located in Vellore is doing special Pooja for couples on Valentines day.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற