மதுரை, நெல்லை,கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை எழும்பூர்-மதுரை இடையே ஜூலை 1 மற்றும் 8ந் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், மதுரையில் இருந்து வருகிற ஜூலை 1 மற்றும் 8-ந்தேதிகளில் காலை 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06020), அதே நாட்களில் மாலை 6.50 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 4 மற்றும் 11-ந்தேதிகளில் காலை 6.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06019), அதேநாட்களில் பிற்பகல் 3 மணிக்கு மதுரையை சென்றடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 1-ந்தேதி இரவு 9.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06001), மறுநாளில் காலை 10.45 மணிக்கு நெல்லையை சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து ஜூலை 3-ந்தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06002), மறுநாளில் அதிகாலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரயில்:
எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வரும் 7 மற்றும் 14-ம் தேதிகளில் சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளத்திற்கு 8 மற்றும் 15-ம் தேதிகளில் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
கோவைக்கு சிறப்பு ரயில்:
கோவையில் இருந்துசென்னை சென்ட்ரல் ரயில் நிலைய்த்திற்கு வரும் 1 மற்றும் 6ம் தேதிகளில் இயக்கப்படும் எனவும் கோவையில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 7.35 மணிக்கு சென்ட்ரல் சென்றடையும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு 4 மற்றும் 11-ம் தேதிகளில் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு 6 மணிக்கு சென்றடையும்
எர்ணாகுளம் சிறப்பு ரயில்:
சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து வரும் 1-ம் தேதி எர்ணாகுளத்திற்கு சிறப்பு கட்டண ரயில் சேவை இயக்கப்படும், மறு மார்க்கமாக எர்ணாகுள்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயி்ல் நிலையத்திற்கு வரும் 3-ம் தேதி இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications