பக்தி பரவசத்தில் கரூர்.. பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்.. 11வது ஆண்டாக கொண்டாட்டம்
கரூர் பசுபதிபாளையம் ஸ்ரீ லட்சுமி விநாயகர் ஐயப்ப பக்தர்கள் நடத்தும் 11 ஆம் ஆண்டு பூக்குழி திருவிழா ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செய்தனர்.
கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்பனுக்கு மிக உகந்த மாதமாகும். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து பூக்குழி திருவிழாவை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் ஸ்ரீ லட்சுமி விநாயகர் ஐயப்ப பக்தர்கள் ஆழி (பூக்குழி) மற்றும் அன்னதான விழா 11 ஆம் ஆண்டு இன்று சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு பசுபதிபாளையம் அருகே பிரத்தியேகமாக பிரம்மாண்ட ஆழி (பூக்குழி) ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்ச்சியை ஐயப்ப பக்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்தனர்.
தொடர்ந்து ஏழு கன்னிப் பெண்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தொடர்ச்சியாக ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வரிசையில் நின்று ஆழி (பூக்குழி) திருவிழாவில் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செய்தனர்.
அதை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கரூர் லட்சுமி விநாயகர் ஐயப்ப பக்தர்கள் நடத்திய பூக்குழி திருவிழாவில் ஏராளமான ஐயப்ப பக்தர்களும் பெண் பக்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை பசுபதிபாளையம் ஸ்ரீ லட்சுமி விநாயகர் ஐயப்ப பக்தர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications