தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்: 5 புதுக்கோட்டை மீனவர்கள் சிறைபிடிப்பு
புதுக்கோட்டை: கச்சத்தீவு அருகே மீன் பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டையைச் சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.
கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை தாக்குவது, கைது செய்வது என்று இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறார்கள். மீன் பிடிக்கும் மீனவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியும் வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களில் 5 பேரை சிறைபிடித்துள்ளனர்.
அந்த 5 பேரையும் காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி தங்களை மிரட்டியதாக கரை திரும்பிய மற்ற மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா என்று மீனவர்கள் தங்களின் வேதனையை தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications