கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் சாமி தரிசனம்-உற்சாக வரவேற்ப

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நெல்லை கோவிலுக்கு வந்த இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன்- வீடியோ

  நெல்லை: நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயத்தில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.

  நெல்லை மாவட்டத்தில் பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் வருகை தந்துள்ளார்.

  Srilanka Northern Province Chief Minister in Kizhpaavur temple

  விழாக்களில் கலந்துகொள்ளும் விக்னேஷ்வரன், கீழப்பாவூர் பகுதியில் உள்ள நரசிம்மர் கோவிலுக்கு 14ஆம் தேதி சாமி கும்பிட வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

  இந்நிலையில் இன்று காலை இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் பாவூர்சத்திரம் அருகிலுள்ள கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தார். அவரை ஆலய அதிகாரிகள் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்து வரவேற்றனர்.

  ஆலயத்தில் நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்ட பின்னர், இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் சாமி முன்பு நின்று சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார்.

  முதல்வர் விக்னஷ்வரனின் வருகையை முன்னிட்டு, தென்காசி, குற்றாலம், மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Srilanka Northern Province Chief Minister Vigneshwaran came to the temple in KizhPaavur Narasimah temple in Nellai. There was a great welcome to him. Then he made a special prayer.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற