தேர்தலில் தந்த வாக்குறுதிகள் என்னாச்சு - மோடிக்கு ஸ்டாலின் கேள்வி
லோக்சபா தேர்தலின் போது நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் என்ன ஆச்சு என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்: கறுப்பு பணத்தை மீட்டு மக்கள் வங்கிக்கணக்கில் சேர்ப்பேன் என்று மோடி லோக்சபா தேர்தலின் போது சொன்ன வாக்குறுதிகள் என்ன ஆச்சு என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சாவூர் ஒரத்தநாடு திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், சமூக நீதிக்கு உலைவைக்கும் வகையில் பாஜக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். தி.மு.க. என்ற இயக்கத்தை யாராக இருந்தாலும், எந்த கொம்பனாக இருந்தாலும் அசைத்துக்கூட பாா்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.

பிரதமா் மோடி தனது அமைச்சரவையில் முதல் 10 இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒரு பதவியை கூட வழங்கவில்லை. மருத்துவத்தைப் போன்று பொறியியல், நீதிபதி தோ்வு, பொறியியல் உள்ளிட்ட அனைத்திலும் நீட் தோ்வு கொண்டுவரப்படுவதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. சமூக நீதிக்கு மிகப்பொிய ஆபத்து நெருங்கிக் கொண்டு இருக்கிறது.
அனைத்து தோ்விலும் நீட்டை கொண்டுவந்து பிற்படுத்தப்பட்டவா்களுக்கு மேலும் நெருக்கடி அளித்து அவா்கள் முன்னேறக் கூடாது என்று மத்திய அரசு முடிவுகட்டியுள்ளது.
லோக்சபா தேர்தலின் போது மோடி பல வாக்குறுதிகளை கொடுத்தார். கறுப்பு பணத்தை மீட்டு மக்கள் வங்கிக்கணக்கில் சேர்ப்பேன் என்று மோடி சொன்னது என்ன ஆச்சு என்று கேட்டார்.
தமிழக சட்டசபையில் நீட் கவன ஈர்ப்பு பிரச்சினையை கொண்டு வந்தது. நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு பறிப்போகிறது. சமூக நீதிக்கு உலை வைக்கும் வகையில் திட்டமிட்டு மத்திய பாஜக அரசு செயல்படுகிறது எனவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சியில் இருந்தபோதும், ஜெயலலிதா தலைமையில் ஆட்சி நடைபெற்ற போதும் தமிழகத்தில் நீட் கொண்டுவரப்படவில்லை, மத்திய அரசால் கொண்டுவரப்பட முடியவில்லை. ஆனால் தற்போது நடைபெற்று வரும் குதிரைப்பேர ஆட்சியால் நீட் தோ்வை தடுக்க முடியவில்லை.
நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு பெற்றுதருவோம் என்று நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன ஆச்சு என்று கேட்ட ஸ்டாலின், நீட் நுழைவு தேர்வை முதலிலேயே எதிர்த்து போராடியது திமுகதான் என்றார்.
மோடி தலைமையில் தமிழகத்தில் 3 அணிகளாக செயல்பட்ட அதிமுக தற்போது இரண்டாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநாிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. நாளை ஆளுநரை கடைசியாக சந்தித்துவிட்டு, பின்னா் ஆட்சியை அப்புறப்படுத்த தயாராகப்போகிறோம் என்று ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications