For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓபிஎஸின் காலம் கடந்த உண்ணாவிரதப் போராட்ட முடிவை வரவேற்கிறேன்: மு.க.ஸ்டாலின்

ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதி விசாரணை கோரி ஓ. பன்னீர் செல்வம் உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதி விசாரணை கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உண்ணாவிரத போராட்டத்திற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று கோரி மார்ச் 8-ம் தேதி முதல் ஓ. பன்னீர் செல்வம் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார். இதற்கு அனுமதி கேட்டு சென்னை காவல் ஆணையரிடம் ஓபிஎஸ் சார்பில் மதுசூதனன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

stalin welcome ops announcent

இந்த நிலையில் சென்னையில் திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசுகையில், அதிமுக ஆட்சியை சட்டப்பூர்வ, அமைதியான ஜனநாயக புரட்சி மூலம் அகற்றி, திமுக ஆட்சியை நிலைபெற செய்வதே நமது ஒரே செயல்திட்டம் என சூளுரை ஏற்போம்.

அந்த சூளுரையே நமது சிந்தனை, சொல், செயல் அனைத்திற்கும் இனி அடிநாதமாக அமையட்டும் என்று, இந்த நாளில் அறைகூவல் விடுக்கின்றேன் என்று கூறினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறுகையில், தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகள் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூற பேச்சாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும், அதற்கு எவ்வாறு செயல்பட வேண்டுமென்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். மேலும் முதல்வர் பதவியில் இருந்தபோது ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்காதது ஏன்? என்றும் இருப்பினும் ஓபிஎஸின் காலம் கடந்த உண்ணாவிரதப் போராட்ட முடிவை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

English summary
Former Chief minister O.Paneerselvam and his support ADMK workers plans to keep hunger strike on March 8th to demand judicial context on Jayalalitha's death. dmk working president welcome that announcement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X