For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குமரியை மிரட்டும் ஓகி புயல்... மிரள வைக்கும் சூறை காற்று... அடியோடு சாய்ந்த பெருமரங்கள்! #ockhi

ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஓகி புயல் மிரட்டல்- 12 மணிநேரத்தில் வருகிறது- வானிலை மையம் எச்சரிக்கை- வீடியோ

    கன்னியாகுமரி: ஓகி புயலின் தாக்கத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தை பலத்த சூறை காற்று மிரள வைக்கிறது. பல இடங்களில் பெருமரங்கள் சாய்ந்து விழுந்தன.

    கன்னியாகுமரி அருகில் வங்கக் கடலில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் சூறைக்காற்றும், கனமழையும் பெய்து வருகிறது.

    இதனால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தி உள்ளார். மேலும், பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.

    மின்சாரம் துண்டிப்பு

    இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் கன்னியாகுமரியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அச்சம் தெரிவித்து உள்ளனர். மேலும், பாதிப்பு குறித்த புகைப்படங்களும் பதிவேற்றப்பட்டு வருகின்றன.

    மக்களுக்கு அறிவுரை

    இன்று காலையில் இருந்தே பலத்த மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சூறைக்காற்றோடு மழை வெலுத்து வாங்கும் வீடியோவை ஒருவர் பதிவிட்டுள்ளார்.

    மழையால் 4 பேர் பலி

    தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலை ஓரங்கள் மற்றும் வீடுகளில் இருந்த மரங்கள் விழுந்துள்ளன. மாவட்டத்தில் பல இடங்களில் இதனால் மின்சாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை மழைக்கு நான்கு பேர் பலியாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மீட்புப் பணிகள் தீவிரம்

    எந்த வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க மாவட்டத்தின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். மேலும், உடனடியாக பாதிக்கபட்ட இடங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கி உள்ளார்.

    English summary
    Storm Broke out alert in kanyakumari people posting vulnerabilities of rain through social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X