மாணவர்கள் மேல கைய வச்சீங்க... ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!
மாணவர்களிடம் விரோத போக்கை கடைபிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
சென்னை: மாணவர்களிடம் ஆசிரியர்கள் விரோத போக்கை கடைபிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது மாணவர்களிடம் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் விரோதப் போக்குடன் நடந்துகொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார். மேலும் வரும் 24ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளில் தனியார் நிறுவனங்கள் நீட் தேர்வு குறித்த பயிற்சி அளிக்க உள்ளதாக அவர் கூறினார்.
பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் தலைமையாசிரியரிடம் தங்கள் பெயரை அளித்து பதிவு செய்துகொள்ளலாம் என்றும் கூறினார். பதிவு செய்யும் மாணவர்களுக்கு சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications