ஜிஎஸ்டி வரி எதிரொலி.. போர்க்களமான தென்மாவட்டங்கள்!
ஜிஎஸ்டி வரியால் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தலை தூக்க துவங்கியுள்ளது.
கோவில்பட்டி ஜிஎஸ்டி வரியால் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தலை தூக்க துவங்கியுள்ளது. கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலுக்கு வந்துள்ளது. இதில் முக்கிய பொருட்களுக்கு குறிப்பாக பொது மக்கள் அதிகம் உபயோகப்படுத்தும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் திகைப்பில் உள்ளனர். பல்வேறு நிறுவனங்களும் போராட்டத்தில் களம் காண தயாராகி வருகின்றன. இரண்டு இட்லிக்கு ஜிஎஸ்டி வரி சேர்த்து 65 ரூபாய் வரை கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

சாதாரண காப்பிக்கு 40 வரை கொடுக்கப்படுவதாவும் பொது மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். இந்நிலையி்ல் கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலைகளில் ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலைகள் மூடப்பட்டன. இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, எட்டயபுரம், கயத்தாறு, கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளிலும், நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோவில், திருவேங்கடம், குருவிகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இரண்டாவது நாளாக இயங்கவில்லை.
இதனால் ரூ.2 கோடி அளவிலான தீப்பெட்டி உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், சிவகாசி, ஏழாயிரம் பண்னை, திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீப்பெட்டி ஆலைகள் தொடர்ந்து மூடிக்கிடக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications