மனம் தளராதீர்கள் மாணவர்களே... வெல்வதற்காகவே பிறந்தவர்கள் நீங்கள்!
நினைத்தது நடக்கவில்லை என்பதற்காக உயிரை விடுவது சரியான முடிவல்ல என்பதே தற்போதைக்கு மாணவர்கள் இருத்திக் கொள்ள வேண்டியது.
சென்னை : நீட் தேர்வால் மருத்துவ இடம் கிடைக்கவில்லை என்ற அனல் நெஞ்சை சுட்டதில் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் அனிதா, ஆனால் உயிரை விடுவது மட்டுமே எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
கழுத்தில் ஸ்டதெஸ்கோப், மேலே வெள்ளை கோட் இந்த உடையை அணியத் தான் எத்தனை எத்தனை ஆசை. தன்னுடைய சின்னஞ்சிறு மனதில் பெரிய கோட்டை கட்டி வைத்திருந்த அனிதாவின் கனவு உச்சநீதிமன்றத்தின் ஒரே தீர்ப்பால் சரிந்தது. இதனால் விரக்தியடைந்த அனிதா மிகுந்த மனஉளைச்சலிலேயே இருந்துள்ளார். இறுதியில் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் அனிதா.
ஏழ்மை என்றாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், படிப்பில் ஜொலித்தவர் அனிதா. சென்னை உயர்நீதிமன்றம் கைவிட்டாலும் உச்சநீதிமன்றம் கைவிடாது என்று தைரியமாக இருந்த அனிதா, இப்படி ஒரு முடிவை எடுத்தது அனைவருக்குமே பெரும் வலியைக் கொடுத்துள்ளது.

போராட வேண்டும்
மாணவர்களுக்கு பல்வேறு கனவுகள் இருந்தாலும் அது கிடைக்காவிட்டால் அதற்காக தொடர்ந்து போராட வேண்டும். போராட்ட குணம் என்பது தமிழனின் ரத்தத்தில் ஊறிய விஷயம் என்பதை இளைய சமூகத்தினர் உணர வேண்டும்.

வீழ்ந்தாலும் எழுவதே நம்பிக்கை
மாவீரன் நெப்போலியன் 18 முறை போரில் தோற்றான் என்பது வரலாறு, ஆனால் இதில் மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் 18 முறை வீழ்ந்தாலும் எதிர்த்து நிற்கும் தைரியம் இருந்தது மாவீரனிடம். இது தான் இன்று மாணவர்களுக்குத் தேவை.

அடுத்த வாய்ப்பிற்காக தயார்படுத்துங்கள்
மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு உடனடியாக சிபிஎஸ்இ பாடத்திட்ட அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டதால் பலரால் இந்தத் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் நீட் தேர்வில் மேலும் 2 முறை தேர்வு எழுதலாம் என்பதை புரிந்து கொண்ட மாணவர்கள் அதனை தங்களது இலக்காக நிர்ணயித்துக் கொண்டு அதனை நோக்கி பயணிக்க வேண்டும்.

பின்வாங்கக் கூடாது
தோல்வி என்பது எப்போதுமே கிடையாது, தன்னம்பிக்கையை இழக்காமல் எதிர்த்து நிற்க வேண்டும் சமூகத்தில். உன்னுடைய கனவை அடைய வேண்டும் என்றால் நீ அதற்காகவே உன்னை அர்ப்பணிக்க வேண்டுமே தவிர தற்கொலை என்ற முடிவை எடுத்து பாதியிலேயே பின்வாங்கக் கூடாது என்பதே கல்வியாளர்கள், மனநல ஆலோசகர்களின் ஒட்டுமொத்தக் குரலாக உள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications