அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு திருச்சியில் மாணவர்கள் பேரணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி: நீட் தேர்வால் மருத்துவ படிப்பை இழந்த அனிதாவுக்கு நீதி கேட்டு திருச்சியில் கல்லூரி மாணவர்கள் பேரணியாக சென்றனர்.

அரியலூரை சேர்ந்த அனிதா பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வால் மருத்துவம் பயில முடியாமல் போனது. உச்சநீதிமன்றம் வரை சென்றும் நீதி கிடைக்காததால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

Students go for Rally in Trichy to demand justice for Anitha

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரியும், அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் மாணவர்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் மாணவர்கள் பேரணியாக சென்றனர்.

திருச்சியல் புனித சிலுவை மகளிர் கல்லூர் மாணவிகள் மவுன போராட்டம் நடத்தினர். மேலும் தூய வளனார் கல்லூரி முன்பாக பேராசிரியர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Students from Trichy go for rally in Trichy to demand justice for Anitha who hangs herself in the neet issue.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற