ஈசியாக இருந்த இயற்பியல் தேர்வு - பிளஸ்டூ மாணவர்கள் "ஹேப்பி அண்ணாச்சி"
சென்னை: எளிமையான இயற்பியல் வினாத்தாள் வந்ததால் பிளஸ் 2-வில் ஏராளமானோர் 200-க்கு 200 மதிப்பெண் பெற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வில் இயற்பியல் பாடத்தின் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததால் ஏராளமான மாணவர்கள் 200 க்கு 200 மதிப்பெண் பெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டுதான் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

இயற்பியல் தேர்வு:
பிளஸ் 2-வில் முக்கியப் பாடங்களுக்கான தேர்வுகள் இயற்பியல் பாடத்துடன் திங்கள்கிழமை தொடங்கின. முதல் பாடமான இயற்பியல் வினாத்தாள் எளிமையாக இருந்ததால் பெரும்பாலான மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வு மையங்களை விட்டு வெளியே வந்தனர்.
எளிமையான வினாத்தாள்:
தேர்வு தொடர்பாக ஆசிரியர்கள் கூறியது, " இயற்பியல் பாடத்தைப் பொருத்தவரை பெரும்பாலும் ஆசிரியர்களும், மாணவர்களும் எதிர்பார்த்த கேள்விகளே அதிகளவில் இடம் பெற்றிருந்தன. இந்த ஆண்டு ஒரு மதிப்பெண் வினாக்களும் எளிமையாக இருந்தன. இதனால், படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் இந்த ஆண்டு 200-க்கு 200 மதிப்பெண் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
பொருளாதாரமும் ஈசிதான்:
அதேபோல், பொருளாதாரப் பாட வினாத்தாளும் மிகவும் எளிமையாக இருந்தது" என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
36 பேர் சிக்கினர்:
மாநிலம் முழுவதும் இயற்பியல், பொருளாதாரப் பாடங்களில் காப்பியடித்ததாக 36 மாணவர்கள் திங்கள்கிழமை பிடிபட்டனர்.
காப்பி அடித்து மாட்டியவர்கள்:
இயற்பியல் பாடத்தில் 6 மாணவர்களும், பொருளாதாரப் பாடத்தில் பள்ளிகளின் மூலமாக தேர்வு எழுதும் 6 மாணவர்களும், தனித் தேர்வர்கள் 24 பேரும் காப்பியடிக்கும்போது பிடிபட்டதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையிலும்தான்:
சென்னை மாவட்டத்தில் பொருளாதார பாடத்தில் காப்பியடித்ததாக 11 தனித் தேர்வர்கள் பிடிபட்டனர். அதற்கடுத்ததாக திருநெல்வேலி மாவட்டத்தில் 8 தனித் தேர்வர்கள் சிக்கினர்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications