தூத்துக்குடி வந்த அண்ணன் விஜய்க்கு நன்றி.. ஸ்டண்ட் சில்வா உருக்கம்
தூத்துக்குடி சென்று துப்பாக்கி சூட்டில் பாதிதத்தவர்களை நலம் விசாரித்த நடிகர் விஜய்க்கு சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் சில்வா உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடி சென்று துப்பாக்கி சூட்டில் பாதிதத்தவர்களை நலம் விசாரித்த நடிகர் விஜய்க்கு சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் சில்வா உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நேற்று இரவு எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தூத்துக்குடிக்கு சென்று ஸ்னோலின் உள்ளிட்ட துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்து உள்ளார். எல்லோர் வீட்டிலும் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறியுள்ளார்.

யாரும் தெரியாத படி முகத்தை கர்ச்சீப்பால் மூடியபடி அவர் துக்கம் விசாரித்துள்ளார். அவர் சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் சில்வாவின் தூத்துக்குடி இல்லத்திற்கும் சென்று துக்கம் விசாரித்துள்ளார்.
தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் மைத்துனர் கொல்லப்பட்டுள்ளார். அவரது தங்கையின் கணவர் செல்வராஜ் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். இதனால் விஜய் அவர்கள் வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்தார்.
இது குறித்து சில்வா தற்போது டிவிட் செய்துள்ளார். அதில் ''எங்கள் வீட்டிற்கு வந்து எங்களின் துக்கத்தை தன் துக்கமாக நினைத்து பகிர்ந்து கொண்டு என் தங்கைக்கு மனமாற ஆறுதல் அளித்துச்சென்ற அன்பு அண்ணன் இளையதளபதி விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி'' என்று உருக்கமாக எழுதியுள்ளார்.
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications