நீட் தேர்வு தோல்விக்கு தற்கொலை என்றுமே தீர்வாகாது : மாணவர்களுக்கு ராமதாஸ் அறிவுரை
நீட் தேர்வு தோல்விக்கு தற்கொலை என்றுமே தீர்வாகாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை : நீட் தேர்வில் தோல்வியடைவதற்குத் தற்கொலைகள் தீர்வாகாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததை அடுத்து, தமிழகத்தில் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் நீட் ரத்து கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உடனடியாக நீட் விலக்கு பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

எதிர்மறை மதிப்பெண்கள்
மருத்துவப் படிப்பில் சேர்ந்துவிட வேண்டும் என்ற கனவுடன் இருந்த சுபஸ்ரீயால் நீட் தேர்வில் 24 மதிப்பெண் மட்டும் பெற்று தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியவில்லை. பல வினாக்களுக்கு சுபஸ்ரீ சரியான பதில் எழுதியிருந்த போதிலும், தவறான விடைகளுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதன் காரணமாக சுபஸ்ரீ தோல்வியடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசு நடவடிக்கை
முன்னதாக இரண்டு தினங்களுக்கு முன் செஞ்சி மாணவி பிரதீபாவின் மறைவால் ஏற்பட்ட அதிர்ச்சியும், சோகமும் இன்னும் முழுமையாக தீராத நிலையில், சுபஸ்ரீயின் மறைவை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இத்தகைய தற்கொலைகள் தவிர்க்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

பயிற்சி மையங்கள் இல்லை
நீட் தேர்வு நடத்தப்படும் விதமும், அதற்கான பாடத் திட்டமும் தமிழக மாணவர்களுக்கு முற்றிலும் புதிதாகும். அதுமட்டுமின்றி, தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி எடுத்துக்கொண்டால் மட்டும் தான் இத்தேர்வில் வெற்றி பெற முடியும் எனும் சூழலில், அதற்கான வாய்ப்பு இல்லாத மாணவச் செல்வங்கள் தோல்வியடைவது இயல்பு தான். இதில் மாணவச் செல்வங்களின் தவறு எதுவும் இல்லை. அவ்வாறு இருக்கும் போது அதற்காக மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்து கொள்வது தேவையற்றது.

நீட் விலக்கு வேண்டும்
இனியும் எந்த ஒரு மாணவரோ, மாணவியோ நீட் தோல்விக்காக உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது. அதேநேரத்தில் அனிதா, பிரதீபா, சுபஸ்ரீ என மாணவச் செல்வங்களை தொடர்ந்து பலி வாங்கி வரும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அரசியல் முட்டு சந்தில் ராமதாஸ்.. அதிமுகவுடன் கூட்டணியா? கேட்டை மூடிய எடப்பாடி.. அடிவருடிகள் அப்செட்! -
NEET 2026: நீட் தேர்வு எழுதப் போறீங்களா? மாணவர்களுக்கு அவசர அவசரமாக வந்த அறிவிப்பு! காலக்கெடு நீட்டிப்பு! -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா?












Click it and Unblock the Notifications