தவறான செய்தி - சிங்கப்பூர் அரசிடம் மன்னிப்பு கேட்டது சன் டிவி!

சிங்கப்பூரில் டிசம்பர் 8-ம் தேதி நடந்த கலவரம் குறித்த ஒளிபரப்பப்பட்ட செய்தியில் உண்மைக்கு மாறான செய்திகளை சன் டிவி தெரிவித்ததாகக் கூறி, அதன் நிர்வாகத்துக்கு சிங்கப்பூர் தூதரகம் மூலம் கண்டனக் கடிதம் அனுப்பப்பட்டது. சரியான செய்தியை வெளியிடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த கடிதத்தைத் தொடர்ந்து உடனடியாக தனது செய்திக்கு சிங்கப்பூர் அரசிடம் மன்னிப்புக் கேட்டுள்ளது சன் டிவி நிர்வாகம்.
சன் டிவியின் பொறுப்பாசிரியர் ஆர் உமாசங்கர் இதுகுறித்து சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதருக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், "அந்த தவறான செய்திக்கு நான் பொறுப்பேற்கிறேன். மன்னிப்பு கோருகிறேன்.
பல இணங்கள் இணக்கத்துடன் வாழும் சிங்கப்பூரின் அமைதியை குலைக்க வேண்டும் என்பது சன் டிவியின் நோக்கமல்ல.
திருத்தப்பட்ட செய்தி அறிக்கை மீண்டும் டிசம்பர் 10-ம்தேதி 7 மணிக்கு, அதே கால அளவுக்கு ஒளிபரப்பப்பட்டுவிட்டது.
இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என சிங்கப்பூர் அரசுக்கு உறுதியளிக்கிறேன், என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications