For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. தீபாவுக்கு அதிகரிக்கும் ஆதரவு... வைத்தவுடன் கிழிக்கப்படும் சசிகலா பேனர்கள்!

ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபாவுக்கு அதிமுகவில் நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் சசிகலாவை ஆதரித்து வைக்கப்படும் பேனர்கள் கிழிக்கப்படுகின்றன.

Google Oneindia Tamil News

நெல்லை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு அதிமுகவில் நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் சசிகலாவை ஆதரித்து வைக்கப்படும் பேனர்கள் கிழித்தெறியப்படுகின்றன.

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது அரசியல் வாரிசாக ஒரு தரப்பினர் சசிகலாவை முன்னிறுத்தி கட்சியின் அதிகாரத்தை அவரிடம் ஒப்படைத்தனர். இருப்பினும் இதனை ஏற்க மறுத்த அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபாவுக்கு ஆதரவு தருகின்றனர்.

support for J.Deepa is increasing day by day!

பல்வேறு இடங்களில் அவரை அரசியலுக்கு வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நெல்லை மாவட்டம் புதுப்பட்டி அம்பேத்கர் நகர் காசிநாதபுரம், கடையநல்லூர் ஆலங்குளம் மற்றும் பாப்பாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தீபாவை அரசியலுக்கு வரவேற்று ஆதரவு பேனர்கள் வைக்கப்படுவது நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

நெல்லையில் ஜெ தீபா பேரவையை தொடங்கியுள்ள அதிமுகவினர் அப்பேரவையின் சின்னமான இரட்டை ரோஜாவுடன் தீபாவுக்கு வரவேற்பு தெரிவித்து பேனர்களை வைத்துள்ளனர். தீபாவை அரசியலுக்கு எம்ஜிஆர் அழைப்பது போன்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் பேனர்கள் வி.கே.புரத்தின் கிடாரக்குளம் பகுதியில் கிழிக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. தீபாவுக்கு அதிகரிக்கும் பேனர்களால் தென் மாவட்டங்களில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

English summary
Support for J.Deepa is increasing day by day. In Nellai District the banners of Deepa is gradually increasing. At the same time Sasikala's banners are tearing by the ADMK workers who is opposing Sasikala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X