'வாழும் எம்ஜிஆர் டிடிவி' புதிய முழக்கத்தை எழுப்பிய ஆதரவாளர்கள்
டிடிவி தினகரனை அவரது ஆதரவாளர்கள் வாழும் எம்ஜிஆர் டிடிவி என்று கோஷமிட்டனர்.
Recommended Video

மதுரை: டிடிவி தினகரனை அவரது ஆதரவாளர்கள் வாழும் எம்ஜிஆர் டிடிவி என்று கோஷமிட்டதை தொடர்ந்து தினகரனும், தங்கதமிழ் செல்வனும் அவர்களை அடக்கினர்.
ஆர்கே நகர் தேர்தல் இடைத்தேர்தலாக இருந்த போதிலும் அதை மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். பணப்புகார்களுக்கு இடையே ஆர்கே நகர் இடைத்தேர்தல் எப்படியோ நடந்து முடிந்து விட்டது.

இந்நிலையில் இன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றன. அதில் 3 சுற்றுகள் முடிவில் தினகரன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.
3-ஆவது சுற்று முடிவில், டிடிவி தினகரன் 15,868 வாக்குகளும், மதுசூதனன் 7,033 வாக்குகளும், மருதுகணேஷ் 3,691 வாக்குகளும், கலைகோட்டுதயம் 737 வாக்குகளும், பாஜக 220 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இந்த வெற்றி குறித்து தினகரன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது வாக்காளர்களுக்கும், தமிழக மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி கூறினார். எம்ஜிஆர் பிறந்த நாளில் நான் முன்னிலை வகித்து வருவது மகிழ்ச்சி என்றும் அவர் கூறினார்.
அப்போது தினகரன் ஆதரவாளர்கள் திடீரென ஆர்கே நகர் எம்எல்ஏ டிடிவி என்று கோஷமிட்டனர். விண்ணை பிளக்கும் அளவுக்கு இவர்களது கோஷம் இருந்தது. மேலும் சிலர் வாழும் எம்ஜிஆர் டிடிவி என்ற புதிய கோஷத்தையும் எழுப்பினர். இதையடுத்து அவர்களை அமைதி காக்குமாறு தினகரனும், தங்க தமிழ் செல்வனும் கேட்டுக் கொண்டனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications