பீப் பாடலுக்கு எதிராக போராடிய மகளிர் சங்கங்கள் அனிதா மரணத்துக்கு ஏன் போராடவில்லை.. டிஆர் பொளேர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பீப் பாடலுக்கு எதிராக போராடிய மகளிர் சங்கங்கள் மாணவி அனிதாவின் மரணத்துக்கு ஏன் போராடவில்லை என் நடிகர் டி ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

லட்சிய திமுகவின் தலைவரும் நடிகருமான டி ராஜேந்தர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக தற்போதைய அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.

T Ranjender accuses that womans association did not protest for Anitha death

மேலும் மத்திய அரசை கண்டு, தமிழக அரசு பயப்படுகிறது என்றும் டி ராஜேந்தர் குற்றம்சாட்டினார். நீட் தேர்வு தொடர்பாக பேசிய அவர் அனிதாவின் ஆன்மாவும் ஜெயலலிதாவின் ஆன்மாவும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசை மன்னிக்காது என்றும் அவர் கூறினார்.

மேலும் பீப் பாடலுக்கு எதிராக போராட்டம் நடத்திய மகளிர் சங்கங்கள் மாணவி அனிதாவின் மரணத்துக்காக ஏன் போராடவில்லை என்றும் டி ராஜேந்தர் கேள்வி எழுப்பினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
T Ranjender accuses that woman association did not protest for Anitha death. He said that Tamilnadu govt afraid of central govt.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற