Tambaram: தாம்பரம் ரயில் நிலையத்தில் புதிய வசதிகள்! ஆச்சரியப்படும் ரயில் பயணிகள்! என்ன சிறப்புகள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ 24 கோடி மதிப்பில் நவீனமயமாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதை பார்க்கும் பயணிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.

சென்னை சென்ட்ரல், எழும்பூருக்கு அடுத்தபடியாக மூன்றாவது ரயில் முனையமாக தாம்பரம் அறிவிக்கப்பட்ட பிறகு, இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

Tambaram Railway Station

இதனால் தற்போதுள்ள நடைமேம்பாலத்தில் கடும் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க, இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் ரூ. 24 கோடி மதிப்பீட்டில் மிகப்பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வரும் இந்தப் பாலத்தில், பயணிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் பல நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

விசாலமான பாலம்: இந்தப் புதிய நடைமேம்பாலம் 8 மீட்டர் அகலம் கொண்டதாக அமைகிறது. இதனால் கூட்ட நெரிசலின்றிப் பயணிகள் வசதியாகச் செல்ல முடியும்.

எஸ்கலேட்டர் வசதி: முதியவர்கள் மற்றும் நோயாளிகள் சிரமமின்றி ஏறிச் செல்ல, 10 நகரும் படிக்கட்டுகள் (Escalators) அமைக்கப்படவுள்ளன. லிஃப்ட் வசதி: இதுதவிர, கனமான உடைமைகளுடன் வரும் பயணிகளுக்காக 9 லிஃப்டுகளும் (Lifts) பொருத்தப்படவுள்ளன.

இணைப்பு: இந்தப் பாலம் ரயில் நிலையத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை நேரடியாக இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மேம்பாலம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. 8 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த நடை மேம்பாலம், நிலையத்தின் அனைத்து நடைமேடைகளையும் இணைக்கும் வகையில் உள்ளது.

இதன் மூலம் பயணிகள் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு பாதுகாப்பாகவும் விரைவாகவும் செல்ல முடியும். தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய நடைமேம்பாலமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

அதிக கூட்ட நெரிசல் நேரங்களில் மக்கள் இரு மேம்பாலங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக பீக் ஹவர்ஸ் எனப்படும் அலுவலக நேரங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்க இது பெரிதும் உதவும் என கூறப்படுகிறது. 9 மின் தூக்கிகள் மற்றும் 10 எஸ்கலேட்டர்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.

தற்போது 6 மின்தூக்கிகள் நிறுவப்பட்டுவிட்டது. மீதமுள்ளவை விரைந்து முடிக்க வேகமாக பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளுடன் சேர்த்து புதிய நடைமேம்பாலத்துக்கு செல்லும் சாலை வசதி மேம்படுத்துதல், நிலையத்தின் முன்பகுதியில் வாகனங்கள் எளிதாக திரும்பிச் செல்லும் பகுதியை விரிவுபடுத்துதல், மேற்கு பகுதியில் புதிய வாகன நிறுத்துமிடம் அமைத்தல், நடைமேடைகளில் கூடுதல் கூரைகள் அமைத்தல் மற்றும் ரயில் பெட்டிகள் நிற்கும் இடங்களை பயணிகளுக்கு குறிப்பிடும் வழிகாட்டி பலகைகள் பொருத்துதல் போன்ற பணிகளும் திட்டமிடப்பட்டு உள்ளன. இந்த பணிகளால் ரயில் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+