பாட்டில்களை வீசி தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு... துப்பாக்கியால் சுட்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேஸ்வரம் : பாக்ஜலசந்தி பகுதியில் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு விரட்டியடித்தனர்.
ராமேஸ்வரம் பகுதியிலிருந்து நேற்று (சனிக்கிழமை) ஏராளமான படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இவர்கள் தனித்தனியே பிரிந்து சென்று, கச்சத்தீவு, தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அப்பகுதியில் 8 கப்பல்களில் ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, மீனவர்களை மிரட்டினர்.
மேலும், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி, அவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். பாட்டில்களையும், உருட்டுக்கட்டைகளையும் வீசி தாக்குதல் நடத்தியதாக தப்பி வந்த முருகன் என்ற மீனவர் கூறினார்.
அப்பகுதியிலிருந்து செல்லாமல், இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டதால், உயிருக்குப் பயந்த தமிழக மீனவர்கள் மீன் பிடிக்காமல் இரவோடு இரவாக கரை திரும்பியதாக, ராமேசுவரம் மீனவ சங்கத் தலைவர் எமரிட் தெரிவித்தார்.
மத்தியில் எந்த ஆட்சி பொறுப்பேற்றாலும் தங்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ள ராமேஸ்வரம் மீனவர்கள், தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேதனை பொங்க தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications