மத்திய அரசு திட்டங்களை திமுக அரசு காப்பியடிக்கிறது.. பொள்ளாச்சி கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு

Subscribe to Oneindia Tamil

பொள்ளாச்சி: மத்திய பாஜக அரசின் திட்டங்களை காப்பியடித்து, அதற்கு புதிய பெயர் வைப்பதில், திமுக சிறந்து விளங்குகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் பொள்ளாச்சியில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு மேடை, தமிழக சட்டப்பேரவை போன்று அமைக்கப்பட்டு இருந்தது. இதில் மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில், 'வள்ளி கும்மி' ஆட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.

மோடி ஆட்சி

மோடி ஆட்சி

இதனைத்தொடர்ந்து மாநாட்டில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் 8 ஆண்டுகளில், 11 கோடி பேருக்கு வீடு, குடிநீர், கழிப்பிடம் என அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. திருமணத்திலிருந்து சொத்து பங்கீடு வரையில் அனைத்திலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஓராண்டில், 6,600 மருத்துவ பணியிடங்களை உருவாக்கியுள்ளோம்.விவசாயிக்கு கவுரவம் கொடுத்துள்ளோம்; தமிழகத்தில், முத்திரா கடனில் 36 லட்சம் பேருக்கு சிறு, குறு கடன் வழங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியை தலைமையிடாக கொண்டு மாவட்டம் ஒன்றை உருவாக்குவோம் என்று உறுதியளித்தார்.

ஸ்டாலின் கனவு

ஸ்டாலின் கனவு

தமிழகத்தில், கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கருமுட்டை விற்பனை என பல புதுவித குற்றங்கள் நடக்கின்றன. மாநிலம் இப்படி இருக்கையில், உத்தரப் பிரதேசம் வரையில் மு.க.ஸ்டாலின் அலை வீசுகிறது என திமுகவினர் காமெடி செய்கின்றனர். 2024ல் இந்தியாவின் துணைப் பிரதமராகலாம் என மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். அவர் முதலமைச்சரான பின் 'நீட்' தேர்வுக்கு எதிராக, அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதினார். இதுநாள் வரை 9 மாதங்களாகியும் ஒருவர் கூட பதில் கடிதம் போடவில்லை என்று விமர்சித்தார்.

 மத்திய அரசின் திட்டம்

மத்திய அரசின் திட்டம்

தொடர்ந்து, இல்லம் தேடி கல்வி திட்டம் மத்திய அரசு தொடங்கி, ரூ.800 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின் திட்டத்துக்கு, திமுக பெயர் வைத்துள்ளது. மத்திய அரசின் திட்டங்களை காப்பியடித்து, அதற்கு புதிய பெயர் வைப்பதில் திமுக சிறந்து விளங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதையறிந்து கச்சத்தீவை மீட்போம் என திமுக நாடகமாடுகிறது. ராணுவ படைகளில், உலகளவில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இதை முதல் இடத்துக்கு கொண்டு வரத்தான் அக்னிபாத் திட்டம் என்றார்.

கனிம வளக்கொள்ளை

கனிம வளக்கொள்ளை

பொள்ளாச்சியை திமுக-வினர் கேரளாவுக்கு மொத்தமாக விற்றுவிட்டனர். இங்கிருந்து ஒரு நாளில், 7,000 லோடு மண் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. மண் வளத்தை காப்பதற்காக கேரளாவில் மண் எடுக்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டு மண்ணை கேரளாவுக்கு கடத்தி விற்பனை செய்கின்றனர். மண் கடத்தலை எந்த அரசு அதிகாரிகளும் தடுப்பதில்லை. திமுக மாவட்டச் செயலாளர்கள், திமுக ஒன்றிய செயலாளர்கள் காவல்துறையை செயல்படவிடாமல் தடுக்கின்றனர். கனிம வளக் கொள்ளையை தடுக்க பாஜக சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கேரளாவுக்கு மண் கொண்டு செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் சிறைபிடிப்போம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+