For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று மட்டும் ரூ.16.35 கோடி.. தமிழக முதல்வர் வெள்ள நிவாரணத்திற்கு ரூ.161 கோடி வசூல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: வெள்ள நிவாரணத்துக்கான தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.161.30 கோடி குவிந்துள்ளது. இன்றைய தினம் மட்டும் ரூ.16.35 கோடி திரட்டப்பட்டுள்ளது.

டிசம்பர் மாத தொடக்கத்தில் சென்னையில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களிலும் மழையால் கடும் சேதம் ஏற்பட்டன.

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் குறைக்கப்படும்-ஹைகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

அதனையடுத்து, தமிழக முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நிதியுதவி செய்யலாம் என முதல்வர் ஜெயலலிதா இம்மாத முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.

இதுவரை தமிழக வெள்ள நிவாரணத்துக்கான முதல்வரின் நிதிக்கு ரூ.161.30 கோடி வந்துள்ளது. இன்றைய தினம், சுந்தரம் நிதி நிறுவனம் ரூ. 3.35 கோடி, என்எல்சி ரூ. 2.5 கோடி, டிவி சுந்தரம் ஐயங்கார் அண்ட் சன்ஸ் லிமிட்டெட் ரூ. 2.5 கோடி, யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ. 2 கோடி அளித்துள்ளன. இன்று ஒருநாளில் எட்டு நிறுவனங்கள் சார்பில் ரூ.16.35 கோடி நிவாரண நிதி வந்துள்ளது.

English summary
Rs 161.30 crore has been donated to Tamil Nadu Chief Minister's Relief Fund from companies and individuals towards flood relief work.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X