ரூபாய் நோட்டு பிரச்சனை எல்லாம் மோடிக்கு எங்கே புரியப் போகிறது.. திருநாவுக்கரசர், குஷ்பு சாடல் !
ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டதால் சாதாரண மக்கள்தான் அவதிப்படுகிறார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை: ரூபாய் நோட்டு பிரச்சனையால் மக்கள் அவதிப்படுவதாகவும், அந்த பிரச்சனை எல்லாம் பிரதமர் மோடிக்கு எங்கே புரியப் போகிறது என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், ரூபாய் நோட்டு பிரச்சனை நாடு முழுவதும் பேசப்படுவதற்கு காரணம் ராகுல்காந்திதான். அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மோடி பாராளுமன்றத்துக்கு வரவில்லை. அதனால்தான் பாராளுமன்றம் முடங்கியது.

இந்த நடவடிக்கை சாத்தியம் இல்லை என்று பா.ஜ.க. தலைவர்களே கூறியிருக்கிறார்கள். மோடி தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளார். இதனால் அவதிப்படுவது சாதாரண மக்கள்தான். தினமும் 15 கோடி பேர் வங்கிகளில் காத்து நிற்கிறார்கள். 50 நாட்கள் பொருத்திருங்கள் என்றார். கருப்பு பணம் ஒழிந்து விட்டதா, என்ன நடந்தது? யாரை திருப்திப்படுத்த இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு பேசும்போது, "பிரசவத்துக்கு மருத்துவமனைக்கு செல்லும் பெண்கள் மருத்துவ செலவுக்கு பணம் கூட கட்ட முடியவில்லை. மணிக்கணக்கில் பணத்துக்காக வரிசையில் நிற்கும் பெண்கள் கழிவறை கூட செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். இதெல்லாம் மோடிக்கு எங்கே புரியப் போகிறது" என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன், பீட்டர் அல்போன்ஸ், விஜயதரணி எம்.எல்.ஏ., யசோதா, மகளிர் காங்கிரஸ் ஜான்சிராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications