For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

100க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்.. காவிரிக்காக எழும்பூரில் ரயில் மறியல்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை எழும்பூரில் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை எழும்பூரில் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகம் முழுக்க மக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அங்காங்கே போராடி வருகிறார்கள்.

Tamil Nadu farmers protesting in Egmore railway station for Cauvery issue

இந்த நிலையில் தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை எழும்பூரில் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ரயில் தண்டவாளத்தில் படுத்து மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் முழக்கம் எழுப்பி வருகிறார்கள். 100க்கும் அதிகமான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் மறியல் போராட்டத்தால் ரயில்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறது. போலீஸ் இவர்களை குண்டுக்கட்டாக தூக்கி மறியல் போராட்டத்தை கைவிடும்படி கூறியுள்ளனர்.

English summary
Tamil Nadu farmers protesting in Egmore railway station for Cauvery issue. 100 plus farmers shouting against Central government for CMB.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X