சாலை விபத்துகளில் தமிழகம்தான் முதலிடம் – ஆண்டுக்கு 16 ஆயிரம் பேர் பலி!
நெல்லை: தமிழகத்தில்தான் விபத்துகள் அதிக அளவில் நடக்கின்றன.அதனால் ஆண்டுக்கு 16,000 பேர் பலியாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மருத்துவ சங்க நெல்லை கிளை சார்பில் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் கண்காட்சி பாளை நூற்றாண்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இக் கண்காட்சியை இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் டாக்டர் பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனியார் மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் அகில இந்திய அளவில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இச்சட்டத்தை செயல்படுத்த 3 கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இச்சட்டம் அமலுக்கு வந்தபின்னர் ஒரே விதமான விதிமுறைகள் பின்பற்றப்படும். தனியார் மருத்துவமனைகளை ஆய்வுசெய்ய தனிநபராக யாரும் வரக்கூடாது, குழுவாக வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 23 ஆம் தேதி, கிட்டத்தட்ட 148 கிளைகளில் ரத்ததான முகாம் நடத்தப்பட உள்ளது. சென்னையில் நடைபெறும் முதல் முகாமை ஆளுநர் ரோசய்யா துவக்கி வைக்கிறார்.
உலக அளவில் இந்தியாவில்தான் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறுகிறது. இந்திய அளவில் தமிழகத்தில்தான் அதிகம். தமிழகத்தில் ஆண்டுக்கு 16 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். 40 சதவீதம் பேர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழக்கின்றனர் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications