நல்லது நடந்து விடுமோ என மற்றவர்கள் பதறுவது ஏன்? ஆளுநர் ஆய்வு குறித்து தமிழிசை சுளீர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நல்லது நடந்து விடுமோ என மற்றவர்கள் பதறுவது ஏன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதும் பல இடங்களில் ஆய்வு நடத்தியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.

Tamil nadu Governor activity is good: Tamilisai Soundararajan

அப்போது ஆளுநர் ஆய்வு செய்ததில் எந்த தவறும் இல்லை என்று அவர் கூறினார். தமிழக ஆளுநரின் நடவடிக்கை பாராட்டக்கூடிய வகையில்தான் உள்ளது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

மாநில அரசின் தேவைகளை சிறப்பாக செய்யவே ஆளுநர் ஆய்வு செய்ததாகவும் அவர் கூறினார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆளுநரின் ஆய்வை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

நல்லது நடந்து விடுமோ என்று மற்றவர்கள் பதறுவது ஏன் என புரியவில்லை என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதனிடையே ஆய்வு நடத்தினால் தான் அரசின் செயல்பாட்டை பாராட்ட முடியும் என ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil nadu BJP leader Tamilisai Soundararajan said Governor activity is good. She also said, i dont understand why others are getting tension of this.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற