ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் கடந்த இரண்டு நாட்களாக வன்முறை நீடித்து வந்த நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடியில் இயல்புநிலையை கொண்டுவர பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை அமைதி குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேசினார்.

ஸ்டெர்லைட் மூடப்படும்
அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக அவர் கூறினார். மேலும் அவர் பேசியதாவது, ஆலையை மூடவே மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி
துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகியுள்ளனர். 19 பேர் படுகாயம், 83 பேர் காயம் அடைந்துள்ளனர். வன்முறையில் 29 ஆண் காவலர்களும் , 10 பெண் காவலர்களும் காயமடைந்துள்ளனர்.

ரூ. 1.27 கோடி வாகனங்கள் சேதம்
1.27 கோடி ரூபாய் மதிப்பிலான 110 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும் 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரையிலிருந்து காய்கறிகள்
தூத்துக்குடியில் மீண்டும் இயல்புநிலையை கொண்டுவருவதே நோக்கம். மதுரையில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படும்.

ஒத்துழைப்பு தேவை
இயல்பு நிலை திரும்ப மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். ரேஷன் கடைகளை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம்
மக்களின் முக்கிய கோரிக்கையான ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும். ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காகவே மின்சாரம், குடிநீர் சேவை நிரந்தரமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இனி மக்கள் தூத்துக்குடியில் அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications