For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை.. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் பகீர் புகார்!

தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் பகிரங்க புகார் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை.. ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் புகார்!

    சென்னை: சிலை கடத்தல் தொடர்பாக தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் பகிரங்க புகார் தெரிவித்துள்ளார்.

    சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

    கோயில்களில் உள்ள சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக 21 வழிமுறைகளையும் உயர்நீதிமன்றம் வழங்கி இருந்தது. இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    ஐஜி பொன்மாணிக்கவேல் புகார்

    ஐஜி பொன்மாணிக்கவேல் புகார்

    அப்போது, சிலைகளை பாதுகாப்பாக வைக்க பாதுகாப்பு அறைகள் அமைப்பது தொடர்பாக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் குற்றம்சாட்டினார்.

    தமிழக அரசு விளக்கம்

    தமிழக அரசு விளக்கம்

    அதற்கு தமிழக அரசு தரப்பில், கோயில்கள் புனரமைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் பாதுகாப்பு அறை கட்டுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

    நீதிபதி எச்சரிக்கை

    நீதிபதி எச்சரிக்கை

    இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கோயில்களில் சிலைகள் பாதுகாப்பு அறை அமைப்பது தொடர்பாக அறிக்கையை ஜூலை 11-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தார்.

    ஒத்துழைப்பு தருவதில்லை

    ஒத்துழைப்பு தருவதில்லை

    இதைத்தொடந்து சிலை கடத்தல் தடுப்பு சிறப்புக்குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள் தமக்கு தெரியாமல் மாற்றப்படுவதாகவும், நீதிமன்றத்தில் அனுமதி பெறாமலும் பணியிட மாற்றம் செய்வதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த அரசு முழு ஒத்துழைப்பு தரவில்லை எனவும் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் குற்றம்சாட்டினார்.

    நீதிபதி கடும் கண்டனம்

    நீதிபதி கடும் கண்டனம்

    ஐ ஜி பொன்மாணிக்கவேலின் இந்த குற்றச்சாட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவருக்கும் அரசு வழக்கறிஞருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
    ஐஜி பொன்மாணிக்கவேலின் குற்றச்சாட்டை கேட்ட நீதிபதி, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றவர்களை நீதிமன்ற அனுமதியின்றி பணியிட மாற்றம் செய்த தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.

    தமிழக அரசுக்க எச்சரிக்கை

    தமிழக அரசுக்க எச்சரிக்கை

    தொடர்ந்து இதுபோல் செயல்பட்டால் டி.ஜி.பி நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதி எச்சரித்தார். மேலும், வழக்கு விசாரணையை ஜூலை 11 ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    English summary
    IG Pon Manickavel accusing Tamilnadu govt in Chennai high court. He said Tamil Nadu govt does not cooperate with the statue smugling issue, said IG Pon Manikavel.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X