எகிறி அடிக்கும் தமிழ்நாடு.. குஜராத்தை வீழ்த்தி மூன்றாம் இடம்.. இது எப்படி! வியக்கும் மற்ற மாநிலங்கள்
சென்னை: தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் நிலையில், இதில் தமிழ்நாடு குஜராத்தை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
அதிகரிக்கும் புவி வெப்ப மயமாதல், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள அனைத்து நாடுகளும் முயன்று வருகிறது.

அதில் முக்கியமான பெட்ரோ, டீசல் வாகனங்களுக்குப் பதிலாக மின்சார வாகனங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. மின்சார வாகனங்கள் என்றால் பெட்ரோல், டீசலுக்கு செலவாகும் பணமும் மிச்சம்
மின்சார வாகனங்கள்: இப்படிப் பல காரணங்களால் மின்சார வாகனங்கள் ரொம்பவே முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. இதற்கிடையே கடந்த 2023ஆம் ஆண்டில் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொத்த மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போதும் அதில் குஜராத்தை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு நான்காவது இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாடு அரசு சமீபத்தில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கப் பல நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில், இதன் காரணமாகவே பயன்பாடு அதிகரித்துள்ளது.
"இது வெறும் ட்ரெய்லர் தான்.. 2 நாட்களில் பல சம்பவங்கள் காத்திருக்கு!"டிஆர்பி ராஜா சொன்ன பரபர மேட்டர்
இந்த லிஸ்டில் நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே அங்கே ஓடும் மின்சார ஆட்டோக்கல் தான். அங்கே பதிவாகும் மொத்த மின்சார வாகனங்களில் 78 சதவிகிதம் மின்சார ஆட்டோக்கள் ஆகும். உபி-இல் கடந்தாண்டு 2.77 லட்சம் மின்சார வாகனங்கள் ரெஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளன.
அடுத்தடுத்த இடங்கள்: இதில் இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிராவும் மூன்றாவது இடத்தில் கர்நாடகாவும் இருக்கிறது. அதேநேரம் உத்தரப் பிரதேச மின்சார ஆட்டோக்களை எடுத்துவிட்டால் தமிழ்நாடு 3ஆவது இடத்தில் இருக்கும். கடந்தாண்டு மகாராஷ்டிராவில் 1.94 லட்சம் மின்சார வாகனங்கள் ரெஜிஸ்டர் ஆகியுள்ளது. இது கடந்த 2022இல் ரெஜிஸ்டர் ஆன 1.36 லட்சமாக இருந்தது. கர்நாடகாவில் 2022இல் 95,899 ஆயிரமாக இருந்த மின்சார வாகனங்கள் கடந்தாண்டு 152,417ஆக உயர்ந்துள்ளன.
தமிழ்நாடு: தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக் கடந்த 2022இல் 66,954 மின்சார வாகனங்கள் ரெஜிஸ்டர் ஆன நிலையில், அது கடந்தாண்டு 90241ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் குஜராத்தைத் தமிழ்நாட்டு பின்னுக்குத் தள்ளியுள்ளது. தமிழ்நாட்டில் மின்சார வாகன விற்பனை தொடர்ந்து வலுவாக உள்ளது, பல முக்கிய மின்சார வாகன நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் அதிகம் விற்பனையாகும் மின்சார டூ வீலர் நிறுவனங்களில் ஏத்தர் எனர்ஜி முதலிடத்தில் இருக்கிறது. கடந்தாண்டில் அது 15,825 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. டிவிஎஸ் மோட்டார் (14,393 யூனிட்கள்), ஓலா எலக்ட்ரிக் (13,608 யூனிட்கள்) மற்றும் க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் (13,597 யூனிட்கள்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
கார்கள்: கார்கள் பிரிவுகளில் டாடா நிறுவனம் தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தான் 50 சதவீதத்திற்கும் மேல் இருக்கிறது. எம்ஜி மோட்டார், எம்&எம் மற்றும் பிஒய்டி ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழ்நாட்டில் கடந்தாண்டு 6,000+ யூனிட் மின்சார கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கடந்தாண்டு "தமிழ்நாடு மின்சார வாகனங்கள் கொள்கை 2023"ஐ அறிமுகம் செய்திருந்தது. அதன்படி சென்னை, கோவை திருச்சி, மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களை மின்சார வாகன மையங்களாக அறிவித்தது. தமிழ்நாடு அரசும் வரும் காலத்தில் இந்த மின்சார வாகன துறையில் தான் கவனம் செலுத்தி வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த துறையில் 6 பில்லியன் முதலீடுகளைப் பெற்று 1.50 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications