கஞ்சா விற்பனை பற்றி தகவல் கூறலாம்! தமிழக காவல்துறை தொலைபேசி எண் அறிவிப்பு! கஞ்சா வேட்டை 4.0!
சென்னை: கஞ்சா விற்பனை பற்றியும், கஞ்சா பதுக்கல் குறித்தும் தகவல் கூற தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டுள்ளது தமிழக காவல்துறை.
தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு விரைவில் ஓய்வுபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக தான் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. இதனிடையே தமிழக காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;

''தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, 2021-ம் ஆண்டு முதல் 'கஞ்சா வேட்டை' நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் 47 ஆயிரத்து 248 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 20 ஆயிரத்து 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25,721 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே கடந்த ஏப்ரல் 3-ந்தேதி இரவு முதல் "கஞ்சா வேட்டை 4.0" அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன்படி குன்றத்தூரில் நடைபெற்ற வாகன சோதனையின் போது ரூ.1 கோடி மதிப்புள்ள 22 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்ட 7 சரக்கு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையே கஞ்சா பதுக்கி வைப்பவர்கள், விற்பர்கள் குறித்து 044-28447701 என்ற தொலைபேசி எண்ணிலும் [email protected] என்ற மின்னஞ்சல் வழியாகவும் தகவல் தெரிவிக்கலாம்.'' இவ்வாறு காவல்துறை தெரிவித்துள்ளது.
எல்லாம் சரி கஞ்சா விற்பனை குறித்து தகவல் அளிப்போருக்கு தேவையான பாதுகாப்பை காவல்துறையினர் உறுதி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை களையெடுக்க உயர் அதிகாரிகளுக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications