தமிழகம் முழுவதும் ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை வேட்டை - பல லட்சம் பறிமுதல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் ஆர்.டி.ஓ, மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். 8 மணிநேரம் நடந்த சோதனையில் ரூ. 15 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது.

தீபாவளியை யொட்டி வசூல் வேட்டை நடப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் டிஜிபி மஞ்சுநாதா உத்தரவின்படி நேற்று காலையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்கள் மற்றும் இணை சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.

Tamil Nadu: Rs14.7 lakh seized from RTO offices

தமிழகம் முழுவதும் மொத்தம் 11 போக்குவரத்து அலுவலகங்களிலும், சைதாப்பேட்டை இணை சார் பதிவாளர் அலுவலகங்களிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டன.

சென்னையில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற சோதனையில், ரூ.1.18 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.43 ஆயிரம் ரொக்கம் சிக்கியது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்திய சோதனையில் 9 ஆயிரம் ரூபாயும், சிக்கியது.

நாகப்பட்டினம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.9 ஆயிரம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ரூ.1.35 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ.40 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் ரூ.3.58 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் சிக்கின. தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.06 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.06 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சோதனை நேற்று இரவு வரை நீடித்தது.

இந்த சோதனையில் மட்டும் ரூ.15 லட்சம் ரொக்கம் மற்றும் ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Raids were conducted at RTOs in Dindigul, Trichy, Thanjavur, Nagapattinam, Kanyakumari, Tirunelveli and Tuticorin districts.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற