வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. 94.4 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இத்தேர்வை 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.

தேர்வு முடிவு இன்று காலை 10மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு சார்பில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே அறிவித்தப்படி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது.

Tamil Nadu SSLC results come out today

இதன்படி, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு அந்தந்த பள்ளிகளில் வெளியிடப்பட்டது. அரசின் இணைய தளங்களில் வெளியிடுவதோடு மாணவ-மாணவிகளின் செல்போன்கள் வழியாகவும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கம் போல மாணவிகள் அதிக தேர்வு பெற்றுள்ளனர். மொத்தம் 94.4 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.2 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில், மாணவர்கள் தேர்ச்சி 92.5 சதவீதமாக உள்ளது

தேர்விற்காக பள்ளிகள் மூலமாக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு முடிவு தெரிவிக்கப்படும். மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu School Education Department will declare the SSLC Class 10 results today in the official website, tnresults.nic.in.
Please Wait while comments are loading...