மோடிக்கு எதிர்ப்பு.. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

  மோடிக்கு எதிர்ப்பு..விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் போராட்டம்- வீடியோ

  சென்னை: பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.

  ராணுவ தளவாட கண்காட்சியை துவக்கி வைக்க இன்று பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடியை கண்டித்து,
  ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இன்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இவர்களுடன் வேறு பல தமிழ் அமைப்புகளும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

   Tamil Nadu Valvurimai Katchi throng at Alandur Metro station

  இதனால் கத்திபாரா ஜக்ஷன் வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

  இதனால், மெட்ரோ ரயில் நிலையப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கருப்புக் கொடிகளுடன் மோடிக்கு எதிராக கோஷமிட்டு வருகிறார்கள் போராட்டக்காரர்கள். சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி பாதுகாப்புக்காக அங்கே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  கமாண்டோ பாதுகாப்பு வீரர்களுடன், போலீசாரும் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Tamilaga valvurimai katchi throng at Alandur Metro station protesting against PM Modi's visit to Tamil Nadu.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற