ரஜினி இந்த முறை ரசிகர்களை ஏமாற்றாமல் நிச்சயம் அரசியலுக்கு வருவார் : தமிழருவி மணியன்
நடிகர் ரஜினிகாந்த் இந்தமுறை நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று தமிழருவி மணியன் தெரிவித்து உள்ளார்.
சென்னை : ரஜினி இந்த முறை நிச்சயம் அரசியலுக்கு வருவார், யாரையும் ஏமாற்றமாட்டார் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்து உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வருகிற டிசம்பர் 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த டிசம்பர் 12ம் தேதி தனது ரசிகர்களை சந்திக்காத நிலையில் ரஜினியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் தளத்திலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்.கே நகர் தேர்தல் வருகிற 21ம் தேதி முடிவடைவதையொட்டி தனது அரசியல் அறிப்பை வெளியிடலாம் என்றும், புத்தாண்டை கருத்தில் கொண்டு அறிவிப்பு வெளியாகலாம் என்றும் பல்வேறு விதமான யூகங்கள் எழுந்து உள்ளன. இதுகுறித்து ரஜினியின் நீண்ட நாள் நண்பரும், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவருமான தமிழருவி மணியன் தனது கருத்தை தெரிவித்து உள்ளார்.
அதில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப ரஜினி ஒருவரால் தான் முடியும்; மக்களும் அவரை தான் மாற்று தலைவராக எதிர்பார்க்கிறார்கள் என்று குறிப்பிட்டார். மேலும், ரஜினியுடனான சந்திப்பில் அவரது அரசியல் ஆர்வம் அதிகரித்து இருப்பதாகவும், கடந்த ஆண்டுகளைப்போல இந்த முறை ரசிகர்களை அவர் ஏமாற்றமாட்டார்.
விரைவில் அரசியல் மற்றும் கட்சி குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு, வருகிற சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து ரஜினி களம் இறங்குவார். அரசியல் களத்தில் ரஜினி கமல் இருவரும் இணைந்தால் தமிழகத்திற்கு எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும் என்று தமிழருவி மணியன் தெரிவித்து உள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications