பாரதிராஜாவும் சீமானும் அந்நிய சக்திகளின் தூதுவர்கள்- தமிழிசை விளாசல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதிராஜாவும் சீமானும் அந்நிய சக்திகளின் தூதுவர்கள் என்று தமிழிசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக சென்னையில் நடந்த போராட்டத்தின்போது போலீஸார் மீது தாக்குதல் நடத்தியது வன்முறையின் உச்சம் என்று ரஜினி கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அதே போராட்டத்தில் பொதுமக்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலுக்கு ரஜினி கண்டிக்காதது குறித்தும் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.

பட்டவர்த்தனம்

பட்டவர்த்தனம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு வாரம் குறித்து நேற்றைய தினம் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், தமிழன் அல்லாத கர்நாடக பாஜகவின் தூதுவர் ரஜினி என்று இப்போது பட்டவர்த்தனமாக தெரிகிறது என்று பாரதிராஜா கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இலங்கை தமிழர் விவகாரம்

இலங்கை தமிழர் விவகாரம்

மேலும் அவர் சாயம் மெல்ல மெல்ல வெளுக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். இலங்கை தமிழர், நியூட்ரினோ, மீத்தேன் பிரச்சினைகளில் ரஜினிகாந்த் வாய்திறக்காதது ஏன். என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

காவிரி பிரச்சினை

காவிரி பிரச்சினை

இந்த நிலையில் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கூறுகையில் தொழில் பிரச்சினைக்காக பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் காவிரி பிரச்சினையை முன்னிறுத்துகின்றனர்.

தமிழிசை விமர்சனம்

தமிழிசை விமர்சனம்

அவர்கள்தான் அந்நிய சக்திகளின் தூதவர்கள் போல் செயல்படுகின்றனர் என்றார் தமிழிசை. காவியின் தூதுவர் என ரஜினி மீது விமர்சனம் எழுந்ததை அடுத்து தமிழிசை, பாரதிராஜாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilisai Soundararajan says that Bharathiraja and Seeman are ambassadors of bad elements.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற