For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்பறம் எதுக்கு அமாவாசையன்று கட்சி தொடங்குனீங்க.. கமலுக்கு தமிழிசை கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    கமல்ஹாசன் போலி பகுத்தறிவாளர்- தமிழிசை சௌந்தரராஜன்- வீடியோ

    மதுரை: கட்சி தொடங்கியதும் கொடி ஏற்றியதும் அமாவாசை நாளில்தான் என்பதால் மய்யம் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் போலி பகுத்தறிவாளர் என்று பாஜக தமிழ்மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

    பாஜக தமிழ்மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "கூட்டணி அமைக்க நாங்கள்தான் அழைக்க வேண்டும். கூட்டணி குறித்து பாஜகதான் முடிவு எடுக்க வேண்டும். அதிமுகவுடன் கூட்டணி என்பது கிடையாது. செப்டம்பரில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்" என்று கூறினார்.

     Tamilisai Soundararajan says, Kamal haasan fake rationalist

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்துக்கு நிர்வாகிகள் அறிவித்திருப்பது குறித்து பேசிய தமிழிசை, "மய்யம் கட்சி தொடங்கியதும் கொடி ஏற்றியதும் அமாவாசை நாளில். கட்சியின் நிர்வாகிகளை அமாவாசை நாளில் அறிவித்துள்ளார். மய்யம் கட்சி ஆரம்பித்தவர் போலி பகுத்தறிவாளர்" என்று குற்றம் சாட்டினார்.

    மேலும், "இந்தியாவுக்கே அம்மா போல, பிரதமர் மோடி இருப்பதால் மாநில அரசுடன் சுமூக உறவு இருப்பது நல்லது" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

    நேற்று வியாழக்கிழமை அமாவாசை நாளில் நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர் நிலைக்குழுவைக் கலைத்துவிட்டு கட்சியின் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அமாவாசை என்பது நல்ல காரியங்களைத் தொடங்குவது வெற்றி அடையும் என்பது இந்துக்களின் நம்பிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இதைக் குறிப்பிட்டே கமல்ஹாசனை விமர்த்துள்ளார் தமிழிசை.

    English summary
    Tamilisai Soundararajan criticize on Friday that, actor Kamal Haasan fake rationalist because his makkal neethi mayyam party started and flag hosted in new moon day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X