கட்சி அறிவிப்பை நடு இரவில் வெளியிட்டது ஏன்?.. கமலுக்கு தமிழிசை கேள்வி
அரசியல் அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் கமல்ஹாசனுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video

சென்னை: அரசியல் அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் நேற்று இரவு தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். பிப்ரவரி 21-ந் தேதி தமது கட்சிப் பெயரை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் கமலின் அரசியல் அறிவிப்பிற்கு தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். புதிய முயற்சியில் ஈடுபடும் கமலுக்கு வாழ்த்துகள் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் ''கமல் தன்னுடைய கட்சி அறிவிப்பை நள்ளிரவில் வெளியிட்டு இருக்கிறார். ஏன் இரவில் கட்சி குறித்து அறிவித்தார் என்று தெரியவில்லை'' என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதேபோல் ''அரசியலுக்கு வந்து மக்களுக்காக எப்படி குரல் கொடுக்கிறார் என்று பார்ப்போம். அவர் மக்கள் பிரச்சனைகளில் நிறைய தலையிட வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வளவு நாள் சினிமாவில் இருந்துவிட்டு அரசியலுக்கு வருவது சரிப்பட்டு வருமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் ''சினிமாவில் இருக்கும் பிரபலத்தை அரசியலில் தக்க வைக்க முடியுமா என்பதையும் இனிதான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்'' என்று பேசி உள்ளார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications