For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியீடு: எத்தனை பேரு எந்தெந்த பாடத்துல சென்டம் தெரியுமா?

ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் 3,656 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் 3,656 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். விலங்கியல் பாடத்தில் வெறும் 4 பேர் மட்டுமே 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்றுவெளியிடப்பட்டன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

292 அரசு பள்ளிகள் உட்பட 1813 பள்ளிகள் 100 சதவீதம் தேர்வு அடைந்துள்ளன. 94.5 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 89.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

3656 பேர் கணக்குல புலி

3656 பேர் கணக்குல புலி

அதிகளவாக கணிதத்தில் 3656 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். தாவரவியலில் 22 பேர் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

வெறும் 4 பேர் மட்டும்தான்

வெறும் 4 பேர் மட்டும்தான்

விலங்கியலில் வெறும் 4 பேர் மட்டுமே 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இயற்பியலில் 187 பேர் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

வேதியியலில் 1123 பேர்

வேதியியலில் 1123 பேர்

வேதியியலில் 1123 பேர் 200 மதிப்பெண்கள் குவித்துள்ளனர். இதேபோல் உயிரியல் பாடத்தில் 221 பேர் 200 மதிப்பெண்கள் எடுத்து சாதித்துள்ளனர்.

கணிப்பொறி அறிவியல் 1647 பேர்

கணிப்பொறி அறிவியல் 1647 பேர்

கணிப்பொறி அறிவியல் பாடத்தில் 1647 பேர் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வணிகவியலில் 8301 பேர் 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

மொழிப்பாடங்களுக்கு வந்த சோதனை!

மொழிப்பாடங்களுக்கு வந்த சோதனை!

தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பாடங்களில் யாரும் முழுமதிப்பெண்கள் பெறவில்லை. மொத்தத்தில் 1200 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில் 330 பேர் 1180 மதிப்பெண்கள் மேல் பெற்றுள்ளனர்.

English summary
In mathematics 3656 students have scored 200 out of 200. In zoology only 4 students got sccored centum. 330 students got above 1180 Marks in the public exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X