தமிழக போலீஸ் டி.ஐ.ஜி.க்கள் 5 பேர் லண்டன் பயணம்... சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை : தமிழக போலீஸ் டி.ஐ.ஜி.க்கள் 5 பேர் விசேஷ பயிற்சிக்காக இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டன் செல்கிறார்கள்.

சென்னை உளவுப்பிரிவு இணை ஆணையர் வரதராஜூ, கிழக்கு மண்டல இணை ஆணையர் ஸ்ரீதர், காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.சத்தியமூர்த்தி, தஞ்சை சரக டி.ஐ.ஜி.சஞ்சய் குமார், திருச்சி சரக டி.ஐ.ஜி.செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் லண்டன் செல்வோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் வருகிற செப்டம்பர் 1-ந் தேதி முதல் 1 மாதம் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி பெறுகிறார்கள். அந்த பயிற்சி முடிந்த பின்பு 1 வார காலம் லண்டன் செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications