For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்களுக்கு தீபாவளி "ஷாக்" கொடுத்த தமிழக அரசு.. தியேட்டர் கட்டணம் கிடுகிடு உயர்வு!

திரையரங்கங்களில் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    மக்களுக்கு தீபாவளி "ஷாக்" கொடுத்த தமிழக அரசு-வீடியோ

    சென்னை : திரையரங்குகளின் கட்டணத்தை ரூ. 160 வரை உய்ரத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

    திரையரங்கு கட்டணத்தை உயர்த்த வேண்டும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிக்கெட் கட்டணத்தை கொண்டுவர வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு டிக்கெட் கட்டணத்தை எவ்வளவு அதிகரிக்கலாம் என்று அனுமதி அளித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

    சென்னையில் ஏசி மல்டிபிளக்ஸ் திரையரங்கு கட்டணம் அதிகபட்சமாக ரூ. 160ம் குறைந்தபட்சமாக ரூ 50ம் கட்டணமாக வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏசி அல்லாத திரையரங்குகளில் அதிகபட்ச கட்டணமாக ரூ. 120ம் குறைந்தபட்சம் ரூ. 40ம் கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம்.

     பிற நகராட்சிகளில் எவ்வளவு?

    பிற நகராட்சிகளில் எவ்வளவு?

    சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற நகரங்களில் ஏசி திரையரங்கு கட்டணம் அதிகபட்சமாக ரூ. 140ம், குறைந்தபட்சமாக ரூ. 50ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற நகரங்களில் ஏசி இல்லாத திரையரங்குகளில் அதிகபட்ச கட்டணமாக ரூ. 100ம் குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 30ம் வசூலித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

     நகராட்சி தியேட்டர் கட்டணங்கள்

    நகராட்சி தியேட்டர் கட்டணங்கள்

    நகராட்சிகளில் உள்ள ஏசி திரையரங்குகளில் அதிகபட்ச கட்டணமாக ரூ. 40ம், குறைந் பட்ச கட்டணமாக ரூ. 5ம் வசூலிக்கலாம். இதே போன்று ஏசி இல்லாத திரையரங்குகளில் ரூ. 30 அதிகபட்ச கட்டணமாகவும் ரூ. 5 குறைந்தபட்ச கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

     ஊராட்சிகளில் ரூ. 15 மட்டுமே

    ஊராட்சிகளில் ரூ. 15 மட்டுமே

    பேரூராட்சிகளில் உள்ள ஏசி இல்லாத திரையரங்குகளில் அதிகபட்சமாக ரூ. 20 கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம். ஊராட்சிகளில் ஏசி இல்லாத திரையரங்குகளில் அதிகபட்ச கட்டணமாக ரூ. 15 மட்டுமே வசூலிக்க வேண்டும்.

    திங்கட்கிழமை முதல் அமல்

    அரசின் இந்த புதிய கட்டண விகிதங்கள் வருகிற திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன. எனவே இந்த புதிய சினிமா கட்டண விகிதப்படியே அடுத்த வாரம் முதல் தியேட்டர்களில் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Tamilnadu government allowed to increase the cinema ticket rates ranging from Rs. 160, and fixed seperate slabs vice corporation, municipality and panchayats cinema theatres.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X