For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆன்லைன் மூலம் சான்று பெறும் வசதி விரிவாக்கம் - அரசு திட்டம்!

தமிழகத்தில் மேலும் 15 சான்றுகள் ஆன்லைனில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இனி அலைய தேவை இல்லை..சான்றிதழையும் ஆன்லைனிலையே பெறலாம்- வீடியோ

    திருநெல்வேலி: இ சேவை மையம் மூலமே விதவை சான்று வேளாண் வருவாய் சான்று உள்ளிட்ட 15 சான்றுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. ஏங்கனவே வருமான சான்று, இருப்பிட சான்று உள்ளிட்டவை ஆன்லைனில் வழங்கப்பட்டு வரும் நிலையில் மக்களின் சுமையை குறைக்கும் விதமாக அரச இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது.

    தமிழகம் முழுவதும் வருவாய் துறை மூலம் வழங்கப்பட்டு வந்த சாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, பூர்விக சான்று, கணவரால் கைவிடப்பட்டோர் சான்று ஆகியவை ஆன்லைன் வழியாக இ சேவை மையம் வழியாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக கலெக்டர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகம், கூட்டுறவு சங்கங்களில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பதிவு செய்ய தற்போது ஒரு சான்றுக்கு ரூ.60 வசூல் செய்யப்பட்டு வருகிறது.

    Tamilnadu government plans to extend the online services of getting certificates

    இந்த மையம் மூலம் பதிவு செய்தால் அவை தாசில்தார் அலுவலகத்தற்கு ஆன்லைன் மூலம் உடனடியாக சென்று அவர்கள் டிஜி்ட்டல் கையொப்பம் வைத்த உடன் மறுநிமிடம் இ சேவை மையத்திற்கு வந்து விடும். இந்த விபரம் உடனடியாக பயனருக்கு குறுதகவலாக சென்று விடும். அவர்கள் வந்து ஒரே நாளில் சான்றை பெற்று செல்லலாம்.

    இந்த சேவையில் மேலும் 15 சான்றுகளை ஆன் லைனில் பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இடப்பெயர்ச்சி சான்று, வேலை வாய்ப்பற்றோர் சான்று, விதவை சான்று, வேளாண் வருவாய் சான்று, பள்ளி சான்றுகள் தவறியற்கான சான்று, ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று, திருமணமகாத சான்று, கலப்பு திருமண சான்று, வாரிசு சான்று, சால்வான்சி சான்று, அடகு கடை சான்று, வட்டி நிறுவன சான்று, ஓபிசி சான்று, சிறுகுறு நிறுன சான்று, முதல் பட்டதாரி சான்று போன்ற சான்றுகள் வழங்கப்பட உள்ளது.

    English summary
    Tamilnadu govvevrnment plans to extend the e sevai services which includes 15 more certificate receiving through online for the benefit of people without any time lack.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X