For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெடுஞ்சாலை மதுக்கடைகளை உடனடியாக மூட உச்சநீதிமன்றம் உத்தரவு.. அவசர அவசரமாக இடமாற்றம் செய்யும் அரசு!

உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை இடமாற்றம் செய்யும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூடவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மதுக்கடைகளை அவசர அவசரமாக தமிழக அரசு இடமாற்றம் செய்து வருகிறது.

உடனடியாக மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை தமிழக அரசு அவசரம் அவசரமாக இடமாற்றம் செய்து வருகிறது.

நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் 31-ந் தேதிக்குள் மூடுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

விளம்பரம் வைக்கக்கூடாது

விளம்பரம் வைக்கக்கூடாது

அத்துடன், நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்கு அடுத்து மதுக்கடைகள் உள்ளன என்ற விளம்பரம் எதையும் வைக்கக்கூடாது என்றும், இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படுகிறதா? என 15 நாட்களுக்கு ஒருமுறை மாவட்ட கலெக்டர் மாநில அரசுக்கு அறிக்கை வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

திருத்தங்கள் கோரிய தமிழக அரசு

திருத்தங்கள் கோரிய தமிழக அரசு

ஆனால் இந்த உத்தரவில் சில திருத்தங்கள் செய்யக்கோரி தமிழக அரசும், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மேலும் சில மாநில அரசுகளும் மற்றும் மதுக்கடை உரிமையாளர்களும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அவகாசம் தரமுடியாது

அவகாசம் தரமுடியாது

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில் தமிழகத்தில் உள்ள மது கடைகளை மூட போதிய கால அவகாசம் தந்திருப்பதால் இனியும் அவகாசம் தர முடியாது என்றும் உடனடியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

அவசர அவசரமாக மாற்றம்

அவசர அவசரமாக மாற்றம்

இதையடுத்து தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள 3000க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை தமிழக அரசு அவசர அவசரமாக இடமாற்றம் செய்து வருகிறது. பல இடங்களில் ஊருக்குள் மதுக்கடைகளை கொண்டு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் அவற்றை மூடும் நிலை உருவாகியுள்ளது.

English summary
After the judgement of Supreme court Tamil Nadu govt transferring tasmac shops from highways
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X