For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பயந்தது போல நடக்கவில்லை.. இடைத்தேர்தல் தோல்வியிலிருந்து பாடம் கற்ற திமுக.. சிறப்பான கம்பேக்!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக நினைத்ததை விட சிறப்பாக செயலாற்றி அதிக இடங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Google Oneindia Tamil News

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக நினைத்ததை விட சிறப்பாக செயலாற்றி அதிக இடங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இடைத்தேர்தல் தோல்வியிலிருந்து திமுக பாடம் கற்றுகொண்டது புலனாகிறது.

கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் திமுக புதுச்சேரியையும் சேர்த்து 39 இடங்களில் வென்றது. லோக்சபா தேர்தல் வெற்றி, திமுகவிற்கு பெரிய அளவில் உத்வேகத்தை கொடுத்தது. ஆனால் அந்த உத்வேகம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை.

அதன்பின் சில நாட்களில் நடந்த, விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தலில் திமுக பெரும் தோல்வியை தழுவியது. தங்கள் கூட்டணியிடம் இருந்த எம்எல்ஏ இடங்களை தேவையில்லாமல் இழந்தது. அதிமுக மீண்டும் தன்னுடைய வாக்கு வங்கியை நிரூபித்து மீண்டது.

தேர்தல் ஆணைய இணையத்தில்.. பாமக பெயரையே காணோமே.. தேமுதிக பெயரெல்லாம் இருக்கே.. கட்சி தொண்டர்கள் ஷாக்!தேர்தல் ஆணைய இணையத்தில்.. பாமக பெயரையே காணோமே.. தேமுதிக பெயரெல்லாம் இருக்கே.. கட்சி தொண்டர்கள் ஷாக்!

திமுக பயம்

திமுக பயம்

இதனால் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள திமுக கொஞ்சம் அச்சம் தெரிவித்தது. அதிலும் உள்ளாட்சி தேர்தலை ஊரக உள்ளாட்சி தேர்தல், மாநகராட்சி தேர்தல் என்று நடத்துவதை திமுக ஏற்கவில்லை. இதற்கு எதிராக திமுக 3க்கும் மேற்பட்ட வழக்குகளை தொடுத்தது.

சட்டம் உதவவில்லை

சட்டம் உதவவில்லை

ஆனால் சட்ட ரீதியாக திமுக கட்சியால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்த முடியவில்லை. மத்திய அரசின் ஆதரவு, மாநில அரசின் அதீத பலம் என்று நிறைய காரணங்களால் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள திமுக அச்சம் தெரிவித்தது. உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்தால், மக்கள் திமுக மீதான மதிப்பை இழக்க வாய்ப்புள்ளதாக திமுக கருதியது.

வா அசுரா வா.. நீங்கதான் திமுகவிற்கு இப்போ தேவை.. தர்மபுரி எம்பி செந்தில் குமாரை கொண்டாடும் மக்கள்!வா அசுரா வா.. நீங்கதான் திமுகவிற்கு இப்போ தேவை.. தர்மபுரி எம்பி செந்தில் குமாரை கொண்டாடும் மக்கள்!

ஆனால் எப்படி இல்லை

ஆனால் எப்படி இல்லை

ஆனால் திமுக அப்படி நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை. தற்போது நீலகிரி, நாமக்கல், கன்னியாகுமரி உட்பட 22 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலில் அனைத்துப் பதவிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் முடிவுகளில் இதுவரை மொத்தமுள்ள 5067 இடங்களில், திமுக கூட்டணி 2263 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

செம வெற்றி

செம வெற்றி

இது திமுகவின் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. கிட்ட 50+ சதவிகித தொகுதிகளை திமுக ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. மேலும் அதிமுக கூட்டணி ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 2049 இடங்களில் வென்றுள்ளது. மாவட்ட கவுன்சிலர் தேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 515 இடங்களில், அதிமுக கூட்டணி 225 இடங்களை வென்றுள்ளது. இதிலும் திமுகதான் முன்னிலை வகிக்கிறது.

பாதிக்கு பாதி

பாதிக்கு பாதி

இதில் திமுக கூட்டணி 251 இடங்களையும் வென்றுள்ளன. அதாவது கிட்டத்தட்ட 50% இடங்களை திமுக நெருங்கிவிட்டது. இன்னொரு பக்கம் ஒன்றிய சேர்மன் பதவிகளில் 33 பதவிகளை அதிமுகவும், 34 பதவிகளை திமுகவும், ஒரு பதவியை அமமுகவும் கைப்பற்றியது. இதிலும் திமுகவே முன்னிலை வகிக்கிறது. 21 ஒன்றிய சேர்மன் பதவிகளுக்கு இழுபறி நீடித்து வருகிறது.

செம வெற்றி

செம வெற்றி

அதேபோல் 24 மாவட்ட சேர்மன் பதவிகளில் 11 மாவட்ட சேர்மேன் பதவிகளை அதிமுகவும் , 11 மாவட்ட சேர்மேன் பதவிகளை திமுகவும் கைப்பற்றி உள்ளது.இதனால் இந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை சந்தித்துவிட்டது என்று கூட கூறலாம்.

பயம் வேஸ்ட்

பயம் வேஸ்ட்

திமுக கொஞ்சமும் பயந்தது போல நடக்காமல், மக்கள் வேறு மாதிரியான தீர்ப்பை வழங்கி உள்ளனர். மிக முக்கியமாக ஆளும் கட்சியை எதிர்த்து, தேர்தலுக்கு முன் மிக குறைவான நாட்களே பணி செய்து, திமுக இவ்வளவு பெரிய வெற்றியை சந்தித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamilnadu Local body elections: DMK party gives a splendid performance just like Lok sabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X