ஓய்வு பெறும் நாளில் டிஜிபியாக நியமனம்.. முதல்வருக்கு டி.கே.ராஜேந்திரன் நன்றி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள டி.கே.ராஜேந்திரன் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். பதவிக்காலம் முடிவடையும் காலத்தில் 2 வருடங்கள் பதவி நீடிப்பு செய்து அவரையே டிஜிபியாக நியமித்து நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது அரசு.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உளவுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்ட டி.பி.ராஜேந்திரன் கூடுதலாக தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாகவும் பணியாற்றி வந்தார். நேற்றுடன் அவருடைய பதவிக்காலம் முடிந்த நிலையில், ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் டி.கே.ராஜேந்திரனுக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tamilnadu police DGP T.K.Rajendran thanking CM Edappadi Palanichami for his appointment.

இதுகுறித்து டி.கே.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநராக என்னை நியமித்த மாண்புமிகு தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Tamilnadu police DGP T.K.Rajendran thanking CM Edappadi Palanichami for his appointment.

நீண்ட வரலாறும், பெருமையும், பாரம்பரியுமும் கொண்டது தமிழக காவல்துறை. சிறப்புமிக்க தமிழக காவல்துறையினர் பெருமையை மேலும் உயர்த்தும் வகையிலும், சட்டம் ஒழுங்கை சீரிய முறையில் காப்பாற்றும் வகையிலும், பொதுமக்களுக்கு சேவையாற்றும் வகையிலும் காவல்துறை பணியாற்றும் என்று இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu police DGP T.K.Rajendran thanking CM Edappadi Palanichami for his appointment.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu police DGP T.K.Rajendran thanking CM Edappadi Palanichami for his appointment.
Please Wait while comments are loading...